முன்னாள் முதலமைச்சருக்கு தீவிர சிகிச்சை..!
உத்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடல்நிலை மோசமானதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருப்பதாகவும் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





