பேரக் குழந்தையை காப்பாற்ற முயன்ற பொழுது உயிரை விட்ட பாட்டி..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பேரக் குழந்தையை காப்பாற்ற முயன்ற பொழுது அறுந்து கிடந்த மின்கம்பி மீது தவறி விழுந்த மூதாட்டி மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தீர்த்தகிரி என்பவரது நிலத்தின் வழியாக சென்ற மின்கம்பி அறுந்து விழுந்த நிலையில் இதுகுறித்து மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இருப்பினும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஈஸ்வரி துணி துவைப்பதற்காக தீர்த்தகிரி நிலத்திற்கு அருகே உள்ள தண்ணீர் தொட்டிக்கு சென்றபொழுது அவர் கம்பி அருகில் சென்றதால் குழந்தையை காப்பாற்ற முயன்ற போது கால் இடரி மின்கம்பி மீது விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





