--- --:--:-- --

தமன்னா இப்படி ஒரு சேலையில் கோவிலுக்கு சென்றாரா..! முகம்சுளித்த நெட்டிசன்கள்..!

12

மன்னா கோவிலில் நடந்த பூஜைக்கு கிளாமராக சேலையில் சென்றது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.நடிகை தமன்னா கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் ஹீரோயினாக இருந்து வருகிறார். தமிழ், தெலுங்கில் அவர் பல டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து இருக்கிறார்.

 

ஆனால் தற்போது அவர் கைவசம் பெரிய ஹீரோ படங்கள் எதுவும் இல்லை. தமன்னா ஹிந்தியில் சில படங்களில் தற்போது நடித்து வருகிறார். ரசிகர்களை கவர்வதற்காக தமன்னா தற்போது விழாக்களில் கலந்துகொள்ளும்போது அதிக கிளாமராக தான் வருகிறார்.

 

அது பல நேரங்களில் முகம்சுளிக்க வைக்கும் அளவுக்கு அதிகம் கிளாமராகவே இருக்கின்றன.தமன்னா தற்போது மலையாளத்தில் களமிறங்குகிறர். அவர் நடிகர் திலீப் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அந்த படத்தின் பூஜை சமீபத்தில் கேரளாவில் இருக்கும் மஹா கணபதி கோவிலில் நடைபெற்றது. பூஜைக்கு தமன்னா அணிந்து வந்த சேலை தான் இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.

Right Menu Icon