மனு கொடுக்க வந்த பெண்ணை தலையில் அடித்த அமைச்சர்..!
விருதுநகரில் மனு கொடுக்க வந்த பெண்ணை அமைச்சர் அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் இந்த செயலுக்கு தமிழக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வுக்கு சென்ற அமைச்சரிடம் பெண் ஒருவர் கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.
மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது அந்த பெண் தனது அமைச்சரிடம் தொடர்ந்து விளக்கமளித்தார். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் அந்தப் பெண் தலையில் அடித்து உள்ளார். பொதுமக்கள் முன்னிலையில் அமைச்சர் அடித்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






