வரும் 15ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு..!
தமிழ்நாட்டில் வரும் 15ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்தது.
சென்னையின் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், பட்டாபிராம் திருநின்றவூர், அயப்பாக்கம், ஆரணி, திருமுல்லைவாயல், பூந்தமல்லி, திருவேற்காடு, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை நேரத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்துள்ளது.
வண்டலூர், மீஞ்சூர் சாலையில் ரம்மியமாக காட்சி தந்துள்ளனர்.சென்னை டு குரோம்பேட்டை வண்டலூர் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சுற்றியுள்ள பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




