செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் இன்று ஆய்வு..!
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார். மாமல்லபுரத்தில் நாற்பத்தி நான்காவது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் பத்தாம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்காக பூஜை அறையில் பிரமாண்ட விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கார் நிறுத்தம் சாலை வசதி உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் பார்வையிடுகிறார்.
முதலமைச்சர் வருகைக்கு முன்னதாக அனைத்து வேலைகளையும் முடக்கும் வகையில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் பாதுகாப்பு காரணங்களுக்காக மாமல்லபுரம் பகுதியில் இன்று முதல் டிரோன் கேமராக்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




