அணைகளில் இருந்து பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறப்பு
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளில் இருந்து விவசாயப் பாசனத்திற்காக இன்று (நவம்பர் 23) தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
பிளவக்கல் திட்டத்தின் கீழ் பாசன வசதி பெறும் கண்மாய்களுக்கு அடுத்த 4 நாட்களுக்கு வினாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும், இன்று முதல் வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை பெரியாறு கால்வாய் நேரடிப் பாசனத்திற்கு வினாடிக்கு 3 கன அடி வீதம் நீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




