நான் மட்டும் கலெக்டரா இருந்தா என்கவுன்ட்டர் பண்ணிருப்பேன்
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியர் பத்மஜாவுக்கு, அதே தொகுதியின் த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாசமான வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், மதுபோதையில் ஆட்சியரின் இல்லத்திற்குச் சென்று தொல்லை கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த சம்பவத்திற்கு கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் என அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன.
அதுமட்டும் இல்லாமல், முதலமைச்சர் விஜய் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற த.வெ.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் எம்.எல்.ஏ அருள் விக்னேஷுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நான் மட்டும் கலெக்டரா இருந்திருந்தால் என்கவுன்ட்டர் பண்ணிருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
அதாவது, நான் மட்டும் கலெக்டராக இருந்திருந்தால் சுட்டு தள்ளியிருப்பேன். அதுமட்டும் இல்லை கட்டிப்போட்டிருபேன். வீடு தேடி ஒருவர் வந்தால் என்ன செய்திருப்பீர்கள், ரெட் கார்ப்பெட் போட்டு வரவேற்று இருப்பீர்களா? அடித்து துவைத்து சுட்டு தள்ள வேண்டும். ஒரு மாவட்ட ஆட்சியருக்கும் பாதுகாப்பில்லை, சாமானிய மக்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது” என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




