உயிரிழந்த மீனவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குக – அண்ணாமலை
’வீ தி லீடர்ஸ்’ அமைப்பு தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தமிழக முதல்வர் விஜய் கவனத்திற்கு, காசிமேடு மீனவர்கள் உயிரிழந்த துயரச் சம்பவம்: மீனவர்களின் பாதுகாப்பில் புதிய அணுகுமுறையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உரிய வாழ்வாதார உத்தரவாதமும் அவசியம்! உயிரிழந்த ஒவ்வொரு மீனவரின் குடும்பத்திற்கும் தலா 50 இலட்சம் ரூபாய் நிவாரண உதவியைத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
இதில், 25 இலட்சம் ரூபாயை உடனடி நிவாரணமாக வழங்குவதுடன், மீதமுள்ள 25 இலட்சம் ரூபாயை அந்தந்தக் குடும்பத்தினரின் பெயரில் நீண்டகால வைப்பு நிதியாகச் செலுத்த வேண்டும். அந்த வைப்புத் தொகையின் மூலம் கிடைக்கும் வட்டி வருவாய், குடும்பத்தின் அன்றாடத் தேவைகள், குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்வாதாரத்திற்கு நிலையான நிதி ஆதாரமாக அமையும்.
மேலும், குடும்பத்தின் பொருளாதார நிலையைப் பாதுகாக்கும் வகையில், தகுதியின் அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாட்டையும் உருவாக்க வேண்டும். உயிரிழந்த மீனவர்களின் குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான கல்விச் செலவுகளுக்கு அரசு சிறப்பு உதவித்திட்டம் ஒன்றையும் அறிவிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




