--- --:--:-- --

பொய் செய்தியால் மன அழுத்தத்திற்கு சென்ற சாய் பல்லவி..!

13

தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவர் தற்போது Ek Din என்கிற திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இதை தொடர்ந்து ரூ. 4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராமாயணா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில், சாய் பல்லவியிடம், “நீங்கள் மலையாளி என்றாலும், தெலுங்கு எப்படி இவ்வளவு சரளமாக பேசுகிறீர்கள்” என்று கேட்கப்பட்டதாம். இதற்கு சாய் பல்லவி, “நான் மலையாளி இல்லை, நான் தமிழ்நாட்டை சேர்ந்த பெண்” என பதில் கூறினாராம்.

 

ஆனால், இதன்பின் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தவறாக வெளியாகி இருக்கிறது. “மலையாளி என்று கூறியதற்கு சாய் பல்லவி கோபமடைந்தார்” என போலியான தகவலாக பரவியதாம். இதனால் தேவையற்ற விவாதங்கள் உருவானதால். இவங்க மலையாளத்தில் நடித்துவிட்டு எப்படி மலையாள மொழியை அசிங்கப்படுத்துவது போல் பண்ணலாம் என்று கேள்வி வந்ததாம்.

 

இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் பேசும்போது சாய் பல்லவி மிகவும் எமோஷனலாக பேசியிருக்கிறார். அதாவது, “நான் சொல்லாத விஷயங்களை சொன்னதாக காட்டியதை பார்த்ததும் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். அது எனக்கு பெரிய மன அழுத்தமாக இருந்தது. நான் கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த தமிழ் பெண் என்பதை மட்டுமே கூறினேன். எந்த மொழியையோ மக்களையோ குறைத்து பேசும் எண்ணமே எனக்கு இல்லை” என சாய் பல்லவி உருக்கமாக பேசியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon