நான் என்ன தவறு செய்தேன், எனது மகன்கள், வாரிகள் என்ன தவறு செய்தார்கள் – ஓ.பி.எஸ் புலம்பல்
தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளிக்கையில், “என்னை வற்புறுத்தியதன் காரணமாகத்தான் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டேன். அண்ணா தி.மு.க-வை சர்வாதிகாரமாகவா வளர்த்தார்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இப்படியா கட்சியை வளர்த்தார்கள். அவர்கள் அனைவரையும் அரவணைத்து கட்சியை வளர்த்தார்கள். நாங்களும் அவர்களைப் பின்பற்றி வந்தவர்கள்தானே. நான் என்ன தவறு செய்தேன். என்னுடைய மகன்கள், வாரிசுகள் யார் என்ன தவறு செய்தார்கள். அ.தி.மு.க-வை இணைத்து விடுங்கள் என அமித்ஷாவைப் பார்த்து கும்பிட்டேன்” என்று கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




