மத்திய அரசை கண்டித்து தி.மு.க கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு போதிய நிதி ஒதுக்காததைக் கண்டித்து சென்னையில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டன.
தமிழ்நாட்டின் அனைத்து மாநகரங்களிலும் ஒன்றியம், நகரம், பேரூர் அளவிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை சைதாப்பேட்டையில் மத்திய பாஜக அரசு மற்றும் அதிமுகவைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




