அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி : ராமதாஸ்
அரசியலில் இருந்து என்னை ஒழித்துவிட வேண்டும் என்று எதை எதையோ பேசுகின்றனர் என பா.மக. நிறுவனர் ராமதாஸ் திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு பொய் கூட்டம், பொய்யும் புரட்டுமே அரசியலாக நடத்திக்கொண்டு இருக்கிறது.
நாங்க அந்த கூட்டத்தை கட்சியில் இருந்தே நீக்கி விட்டோம். அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிவிட்டோம். அவர்களோடு சேர்ந்த சில கூட்டங்கள் பொய், பொய்யாக பேசுகிறது.
இட்டுக்கட்டி பேசுவது, ஏளனமாக பேசுவது, மனம் புண்படும் வகையில் பேசுவது ஆகியவற்றை செய்கிறது.என்னை மட்டுமல்ல 26 ஆண்டு காலம் ஓய்வின்றி உழைத்த கவுரவ தலைவர் ஜிகே மணியையும் வசை பாடுபவதை தொழிலாக செய்து வருகிறது என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




