திருவாடானை வருவாய் துறை ஊழியர்கள் பணிக்கு வராததால் பொதுமக்கள் அவதி..!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் தாலுகா அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்காக இன்று பொதுமக்கள் வந்து காத்திருந்தனர். இந்நிலையில் வருவாய்த் துறையினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைவரும் விடுப்ப எடுத்து சென்றதால் அலுவலகம் பூட்டியிருந்தது.

 

அலுவலகத்திற்கு வெளியில் எவ்வித அறிவிப்பும் ஒட்டப்படாத நிலையில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளனர்.  இதுபோன்ற சமயங்களில் முன்னறிவிப்பு செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது