மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார். மாநிலத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிக்கு எதிராகத் தான் தாக்கல் செய்த மனு மீது தானே வாதிட அனுமதி கோரினார்.
அதன்படி, தனது தரப்பு வாதத்தை எடுத்துரைத்த மம்தா பானர்ஜி, “தேர்தல் ஆணையம் 58 லட்சம் வாக்குகளை நீக்கிவிட்டனர், மேலும் படிவம் 6 மூலமாகவும் மேல்முறையீடு செய்ய எந்த வாய்ப்பும் இல்லை. அவர்கள் வங்காளத்தை மட்டுமே குறிவைக்கிறார்கள்.
மேற்கு வங்கத்திற்காக மட்டுமே அவர்கள் நுண்-பார்வையாளர்களை நியமித்துள்ளனர். மேற்கு வங்க மக்களை அடக்கி ஒடுக்குவதற்காகவே இந்த நுண்-பார்வையாளர்களை அவர்கள் நியமித்துள்ளனர்.
எனது இறுதி வாதம் என்னவென்றால், தர்க்கரீதியான முரண்பாடு உள்ள வழக்குகளை நீக்கக்கூடாது, மேலும் அவற்றை நுண்-பார்வையாளர்களால் அல்லாமல், உள்ளபடியே சரிபார்க்க வேண்டும். நான் நீதிமன்றத்திற்கு எனது மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகம் பாதுகாக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
மேலும் செய்திகள் :
மாலத்தீவில் நீச்சல் உடையில் நடிகை ஸ்ரேயா சரண்..!
தேர்தல் விருப்ப மனுக்களை சமர்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு - த.வெ.க அறிவிப்பு
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சென்னை வருகை
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்- மீண்டும் பரப்புரை தொடங்கும் இ.பி.எஸ்
பிப். 15 முதல் சுங்கக் கட்டணம் மாற்றம்..!
தேர்தலுக்காக கூட தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க அவருக்கு மனம் வரவில்லை: சிவசங்கர்






