--- --:--:-- --

அதிரடியாக சரிந்த தங்கம் விலை..!

1

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை எட்டி வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. டிசம்பர் மாத தொடக்கத்திலேயே நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.

 

நேற்று 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,070க்கும் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,560க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

அதன் படி இன்று 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.12,040க்கும் சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.96,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.10,040க்கும் சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.80,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.196க்கும் ஒரு கிலோ ரூ,1,96,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon