--- --:--:-- --

காசா அமைதி திட்டத்திற்கு இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்புதல்: டிரம்ப்

6

காசா அமைதி ஒப்பந்தத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 2 வருடமாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வருவதில், இது ஒரு வரலாற்று மற்றும் முன்னெப்போது நிகழாத நிகழ்வாகும் எனவும் டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக டிரம்ப் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது; இஸ்ரேலும், ஹமாஸும் அமைதித் திட்டத்தின் முதல் கட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இதனால் அனைத்து பிணைக் கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள். அமைதியை உருவாக்க, முதல்கட்ட ஒப்பந்தத்தின் படி தனது பாதுகாப்பு படையினரை இஸ்ரேல் திரும்ப பெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon