விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, இந்து முன்னணி உள்ளிட்ட சில இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பல இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. அதன்படி விநாயகர் சதுர்த்தி விழாவின் போது பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்கு பின்னர் இன்று நீர்நிலைகள் மற்றும் ஆறுகளில் கரைக்க பக்தர்கள் தயாராகி வருகிறார்கள்.
அந்தவகையில் தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை 2 கட்டங்களாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 312 சிலைகளையும் ஊர்வலமாக சென்று இன்று நீர்நிலைகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதனால் 12 பள்ளிகளுக்கு இன்று மதியத்திற்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதனால் 12 பள்ளிகளுக்கு இன்று மதியத்திற்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக மாவட்ட முதன்மை அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 28/08/2025 வியாழன் அன்று செங்கோட்டை பகுதிகளில் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்து வசதிகள் மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட முதன்மை அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 28/08/2025 வியாழன் அன்று செங்கோட்டை பகுதிகளில் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்து வசதிகள் மாற்றப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் வீட்டிற்கு திரும்புதில் சிரமங்கள் ஏற்படா வகையில், செங்கோட்டை பகுதியிலுள்ள அனைத்துவகை பள்ளிகளும் மதியம் விடுமுறை அளித்து மாணவர்களை பத்திரமாக அனுப்பிட அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், இன்று நடைபெற இருந்த மாதாந்திர தேர்வுகளையும் மற்றொரு நாளில் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் வீட்டிற்கு திரும்புதில் சிரமங்கள் ஏற்படா வகையில், செங்கோட்டை பகுதியிலுள்ள அனைத்துவகை பள்ளிகளும் மதியம் விடுமுறை அளித்து மாணவர்களை பத்திரமாக அனுப்பிட அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இன்று நடைபெற இருந்த மாதாந்திர தேர்வுகளையும் மற்றொரு நாளில் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




