--- --:--:-- --

கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய கோரிய மனு தள்ளுபடி

12

கொலை, கொள்ளை வழக்கில், கோடநாடு பங்களாவை மாவட்ட நீதிபதி ஆய்வு செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கோடநாடு பங்களாவில் தடயங்கள் அழிக்கப்பட்டு உள்ளதால், வழக்கை விசாரித்து வரும் மாவட்ட நீதிபதி மற்றும் எதிர்தரப்பு வக்கீல்கள் கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறி ஜித்தின் ஜாய் தரப்பில் கடந்த ஏப்ரல் மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

 

இந்த மனுவை தள்ளுபடி செய்தும், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 19-ந் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon