--- --:--:-- --

கன்னியாகுமரி நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் பொதுமக்கள்!

2

டி அமாவாசை முன்னிட்டு கன்னியாகுமாரி மாவட்டதில் உள்ள பிரதான நீர் நிலைகளில் மறைந்த முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். ஆடி அமாவாசை என்றாலே முன்னோர்களுக்கு நன்றி செலுத்தும் நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் முன்னோர்கள் பூமிக்கு வருவதாக ஐதீகம். இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று ஆடி அமாவாசைக்காக உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், கோதையாறு, பரலியாறு, தாமிரபரணி ஆறு உட்பட மாவட்டத்தின் முக்கிய நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செலுத்தும் பாரம்பரிய நிகழ்வு நடக்கிறது. ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள நீர் நிலைகள் அருகே உள்ள கோயில் நிர்வாகம் சார்பாக திதி தர்ப்பணம் பூஜை செய்ய அர்ச்சகர்கள் படித்துறை பூஜை பொருட்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

 

குறிப்பாக முக்கடல் சங்கமிக்கும் குமரி திரிவேணி சங்கமம், மற்றும் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகம், கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் மூதாதையர்களுக்கு புண்ணிய ஸ்தலமான அரபிக்கடலில், இந்திய பெருங்கடல், வங்கக்கடல் சங்கமிக்கும் திருவேணி சங்கமத்தில் திதி தர்ப்பணம் செலுத்தினர்.

 

இது போன்று குழித்துறை தாமிரபரணி நதிக்கரையில் தமிழகம், கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதலே திதி தர்ப்பணம் செலுத்தி வருகின்றனர். குழித்துறை நகராட்சி சார்பில் வாவுபலி பொருள் கண்காட்சி நடத்து வருகிறது. இந்த பகுதியில் நகராட்சி சார்பில் தர்ப்பணம் செலுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

 

அது போல மகாதேவர் கோயில் படித்துறையில் தர்ப்பண பூஜைகள் செய்ய சிறப்பு பந்தல்கள் அமைக்கப்பட்டு, ஆஜார ரீதியான பூஜைகள் செய்யப்பட்டு, தாமிரபரணி படித்துறையில் தர்ப்பணம் செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. தமிழகம், கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதலே தர்ப்பணம் செலுத்தி வருகின்றனர்.

 

கன்னியாகுமரி, குழித்துறை, தாமிரபரணி ஆறு உட்பட முக்கிய நீர் நிலைகளில் ஐநூறு கற்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர் காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்க தீயணைப்பு மீட்பு துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon