தவெக தலைவர் விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? – ஈபிஎஸ்
தவெக தலைவர் விஜய் உடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதா என்ற கேள்விக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவிக்கவில்லை. ’மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த சுற்றுப்பயணத்தில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் அவர் பேசும்போது, அதிமுக கூட்டணியில், நினைத்துப் பார்க்க முடியாத பிரம்மாண்ட கட்சி சேர உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
’மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த சுற்றுப்பயணத்தில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் அவர் பேசும்போது, அதிமுக கூட்டணியில், நினைத்துப் பார்க்க முடியாத பிரம்மாண்ட கட்சி சேர உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுகவின் கூட்டணி அழைப்பை விசிக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் நிராகரித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இதனால் அந்த பெரிய கட்சி எது என்கிற விவாதம் தமிழக அரசியலில் எழுந்துள்ளது. ஏற்கனவே அதிமுகவின் கூட்டணி அழைப்பை விசிக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் நிராகரித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். இதனால் அந்த பெரிய கட்சி எது என்கிற விவாதம் தமிழக அரசியலில் எழுந்துள்ளது.
இந்நிலையில், ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கே பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக கூறினார். அதிமுகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், கூட்டணி ஆட்சி அமைக்குமா என்று வினாவிற்கு, யூகத்தின் அடிப்படையிலான கேள்விக்கு பதில் அளிக்க முடியாது என்று கூறினார்.
அதே சமயம், அதிமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் குறிப்பிட்டார். இந்நிலையில், ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கே பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக கூறினார். அதிமுகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், கூட்டணி ஆட்சி அமைக்குமா என்று வினாவிற்கு, யூகத்தின் அடிப்படையிலான கேள்விக்கு பதில் அளிக்க முடியாது என்று கூறினார்.
அதே சமயம், அதிமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் குறிப்பிட்டார். தவெக தலைவர் விஜய் உடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதா என்ற கேள்விக்கு, தேர்தல் யுக்தி மற்றும் வியூகங்களை வெளியே சொல்ல முடியாது என்று பதில் அளித்துள்ளார்.
மேலும், விஜய் இறங்கி வந்தால், பாஜகவுடனான கூட்டணியை முறித்து விட்டு, தவெகவுடன் கூட்டணி வைப்பீர்களா என்று கேள்விக்கு, யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
தவெக தலைவர் விஜய் உடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதா என்ற கேள்விக்கு, தேர்தல் யுக்தி மற்றும் வியூகங்களை வெளியே சொல்ல முடியாது என்று பதில் அளித்துள்ளார்.
மேலும், விஜய் இறங்கி வந்தால், பாஜகவுடனான கூட்டணியை முறித்து விட்டு, தவெகவுடன் கூட்டணி வைப்பீர்களா என்று கேள்விக்கு, யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். பாஜக மற்றும் தவெகவை ஒப்பிட முடியாது என்று கூறியுள்ள ஈபிஎஸ், ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு வகையில் பலம் இருப்பதாக தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிகளை கூட்டணியில் சேர்த்துக் கொள்வீர்களா என்ற வினாவிற்கு, திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று எண்ணம் கொண்ட அனைத்து கட்சிகளையும் வரவேற்பதாக பதில் அளித்துள்ளார்.
பாஜக மற்றும் தவெகவை ஒப்பிட முடியாது என்று கூறியுள்ள ஈபிஎஸ், ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு வகையில் பலம் இருப்பதாக தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிகளை கூட்டணியில் சேர்த்துக் கொள்வீர்களா என்ற வினாவிற்கு, திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று எண்ணம் கொண்ட அனைத்து கட்சிகளையும் வரவேற்பதாக பதில் அளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




