ரேபிஸ் தடுப்பூசி போட்டும் குழந்தைகள் மரணம்..!
கேரளாவில், ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகும் 2 குழந்தைகள் ரேபிஸ் நோயால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, பொது சுகாதார மற்றும் தடுப்பு மருத்துவ இயக்ககம் (DPH) சுகாதாரப் பணியாளர்களுக்கு ரேபிஸ் குறித்த முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளது.
நாய் கடித்த வகையை அடையாளம் கண்டு, ரேபிஸ் இம்யூனோகுளோபுலின் (RIG) மருந்தை ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசியுடன் (ARV) முறையாகச் செலுத்துவது குறித்து சுகாதாரப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




