பாகிஸ்தானியர்களை வெளியேற்ற இன்று வரை கெடு
பஹல்காம் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வரிசையில், இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை இன்றைக்குள் வெளியேற்ற அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கெடு விதித்துள்ளது. இதனை அனைத்து மாநில முதல்வர்களிடமும் உள்துறை அமைச்சர் அமித்ஷா போனில் வலியுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




