1-9 வகுப்பு மாணவர்களுக்கான அட்டவணை வெளியீடு..!
தமிழ்நாட்டில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனியார் பள்ளி, தொடக்க கல்வி, பள்ளிக்கல்வி இயக்குநர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்படுகிறது.
அதன்படி அரசு, அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகளுக்கு 1 முதல் 5 ஆம் வகுப்பு மற்றும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2024-25ஆம் கல்வியாண்டிற்கான முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
அனைத்து வகை தொடக்க / நடுநிலை /உயர்நிலை மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு இத்தேர்வு கால அட்டவணை குறித்த விவரத்தினை தெரிவிக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வகை மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




