பாம்பன் செங்குத்து தூக்கு பாலம் திறப்பு..!
பாம்பன் கடலில் புதிதாக கட்டப்பட்டுள்ள செங்குத்து தூக்கு பாலம் திறக்கப்பட்டு இன்றே முதல்முறையாக இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் கடந்து சென்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் கடலில் கப்பல் கடந்து செல்லும் வண்ணம் இரும்பு செங்குத்து தூக்கு பாலத்துடன் கூடிய புதிய அறையில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
வடக்கு சிவசந்தி கடல் பகுதியில் இருந்து கடலோர காவல் படை செங்குத்து தூக்கு பாலம் வழியாக கடந்து தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு சென்றது. இதனை தொடர்ந்து செங்குத்து பாலம் திறக்கப்பட்டு 22 பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயில் இயக்கி சோதனை செய்யப்பட்டது.
இதன் பின்னர் இந்திய கடலோர காவல் படை மீண்டும் வடக்கு கடலோர பகுதிக்கு கடந்து சென்றது. மேலும் பாம்பன் செங்குத்து தூக்கு பலம் மூடப்பட்டு இராமேஸ்வரத்தில் இருந்து மண்டபம் நோக்கி ரயில் இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





