--- --:--:-- --

நடிகை ஹனி ரோஸுக்கு பாலியல் தொல்லை..!

4

டிகை ஹனி ரோஸுக்கு தொழிலதிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. சிங்கம் புலி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் ஹனிரோஸ். கேரள தொழிலதிபர் ஒருவர் தன்னை பின் தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக இன்ஸ்டாகிராமில் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

 

இன்ஸ்டாகிராமிலும் அந்த நபர் தன்னைப் பற்றியும் தனது உடல் அமைப்பு குறித்தும் அருவருக்கத்தக்க கருத்துக்களை பதிவிட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

மேலும் இரண்டு பேர் அந்த நபருடன் சேர்ந்து தொல்லை கொடுப்பதாக குற்றம் சாட்டியுள்ள ஹனி ரோஸ் இதோடு நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon