--- --:--:-- --

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய ரூ.1,000 கோடி..!

8

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்க பணம் பரிசு பொருட்கள் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் கைப்பற்றியுள்ளது.

 

28 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஒரே கட்டமாகவும் ஜார்கண்ட் மாநிலத்தின் 38 தொகுதிகளில் இரண்டாம் கட்டமாகவும் நாளை மறுதினம் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த சூறாவளி பிரச்சாரம் இன்றுடன் ஓய்ந்தது.

 

தேர்தலில் பொதுமக்கள் வாக்களிப்பதற்காக அரசியல் கட்சிகள் வைத்திருந்த சுமார் 1000 கோடி மதிப்புள்ள பணம் பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த தொகை கடந்த 2019 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்டு மொத்த தொகையை விட ஏழு மடங்கு அதிகம் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon