உத்திரபிரதேசத்தில் புதிரில் கிடந்த குழந்தையை மகளாக தத்து எடுத்த காவலரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் பெற்றோரால் கைவிடப்பட்ட காட்சியில் குழந்தை அங்கிருந்து வீசப்பட்டது.
குழந்தையை மீட்ட காவலர் தனது மகளாக குழந்தையை தத்தெடுத்துக் கொண்டார். குழந்தையை கேட்டு யாரும் வராததால் இவ்வாறு செய்தேன் என்றும் திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகி குழந்தை இல்லாததால் இது தங்களின் வாழ்க்கைக்கு புதிய வருகையாக மாறுகிறது எனவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.