--- --:--:-- --

பாதாள சாக்கடை கிணற்றில் இறங்கி சுத்தம் செய்த ஊழியர்கள்..!

7

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் பாதாள சாக்கடை கிணற்றில் இறங்கி துப்புரவு பணியாளர்கள் மனித கழிவுகளை எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.

 

பெரியகுளம் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் அனைத்தும் நகராட்சிக்கு சொந்தமான சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த கழிவு நீர் கிணறுகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

 

அடைப்புகளை நீக்குவதற்காக துப்புரவு பணியாளர்களுக்கு கிணற்றுக்கு உள்ளே இறங்கி வெறும் கைகளால் அவற்றை அள்ளி அப்புறப்படுத்தும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

2013 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்ட விதிமுறைகளின் படி மனிதக் கழிவுகளை மனிதரை அகற்றுவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இது போன்ற செயல்களில் ஈடுபடுத்தி நகராட்சி நிர்வாகத்தின் செயல் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பெரியகுளம் நகராட்சி ஆணையரிடம் கேட்ட பொழுது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon