புனே விமான நிலையத்தின் பெயர் மாற்றம்..!
புனே விமான நிலையத்திற்கு ‘ஜகத்குரு சாந்த் துக்காராம் மகராஜசர்வதேச விமான நிலையம்’ என பெயரை மாற்றும் திட்டத்திற்கு மகாராஷ்டிரா அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்ட நிலையில், இறுதி ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சமீபத்தில் அந்தமானில் உள்ள போர்ட் பிளேயர் விமான நிலையம் ‘ஸ்ரீ விஜயபுரம்’ என பெயர் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




