காதலித்தவர் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் மரண வாக்குமூல வீடியோ வெளியிட்ட பெண்..!
சென்னை தாம்பரத்தில் காதலித்தவர் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் மரண வாக்குமூல வீடியோவை இன்ஸ்டாவில் பதிவு செய்துவிட்டு இளம் பெண் விபரீத முடிவு எடுத்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பெங்களூருவை சேர்ந்த 24 வயது உடைய ப்ளூரியா தாம்பரத்தில் உள்ள பிரபல துணிக்கடையில் விற்பனையாளராக பணிபுரிந்தார். அதே கடையில் பணியாற்றும் 17 வயது சிறுவனுடன் நட்பு ஏற்பட்டு சில நாட்களில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது.
காதலனின் பெற்றோர் காதலை ஏற்றுக் கொள்ள மறுத்ததாக கூறி மனமுடைந்த பெண் , மரண வாக்குமூல வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டு வீட்டில் விபரீத முடிவு எடுத்துக் கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





