--- --:--:-- --

திருவாடானை அருள் சினேகவல்லி அம்பாள் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு மாலை மாற்றும் நிகழ்வு..!

10

திருவாடானை அருள் சினேகவல்லி அம்பாள் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெறுவதற்கு முன்னதாக மாலை மாற்றும் நிகழ்வு நடைபெற்றது.

 

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் மிகவும் பிரசித்திபெற்ற  ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பாண்டி 14 திருத்தலங்களில் எட்டாவது ஸ்தலமாக விளங்கும் ஸ்ரீ சினேகா வள்ளி அம்பாள் சமேத ஸ்ரீ ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர  திருவிழா நடைபெற்று வருகிறது.

நாளை திருகல்யான வைபவம் நடைபெறும் முன்னதாக இன்று சுவாமி அம்பாள் மாலை மாற்றும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது கருட பகவான் அதை கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்தில் ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாய பக்தி கோசம் எழுப்பினார்கள்.

 

இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள்பெற்றுச் சென்றனர். அதைத் தொடர்ந்து சுவாமிகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த இன்று திருக்கல்யாண வைபவம் நடைபெறும்

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon