--- --:--:-- --

பள்ளிக்கூட சமையலறை.. சாக்கடையால் நோய் பரவுமா..?

8

திருவள்ளூரில் அரசு தொடக்கப்பள்ளியில் சமையல் கூடம் அருகே திறந்தவெளி சாக்கடை கால்வாய் அமைந்துள்ளது. பெற்றோர்களை அதிருப்தி அடைய செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.

 

இந்த பள்ளியில் படிக்கட்டுகள் சந்திப்பில் சமையல் கூடம் செயல்பட்டு வருகிறது. குறுகிய இடத்தில் சமையல் கூடம் அமைந்துள்ள நிலையில் அதன் அருகில் திறந்த வெளி சாக்கடை கால்வாய் உள்ளதால் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

புதிய சமையல் கூடம் மற்றும் விளையாட்டு கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon