பம்பரம் இல்லை…தனியாக சுற்றும் மதிமுக!

யிரைக் கொடுத்தாவது பம்பரம் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று கண்ணீர் விட்டு, அப்பா வைகோவை போலவே மகன் துரை வைகோ செண்டிமெண்ட்டாக டயலாக் எல்லாம் விட்டார். ஆனால், தேர்தல் ஆணையம் நோ சொல்லிவிட்டதால் மனம் நொந்துவிட்டார் துரைவைகோ.

 

சரி, அதெல்லாம் இருக்கட்டும்.. கூட்டணி எஜமானனான திமுகவில் உள்ளவர்களாவது திருச்சியில் சப்போர்ட் ஆக இருப்பார்கள் என்று பார்த்தால், துரைவைகோவிற்கு அதுவும் ஏமாற்றம் தானாம். திருச்சியில் வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றபோது உள்ளூர் மினிஸ்டர் கே.என். நேரு வரவே இல்லை. கேட்டால், பெரம்பலூரில் மகன் வேட்புமனு தாக்கலுக்கு சென்றுவிட்டார் என்றனர் உடன் பிறப்புகள்.

 

அட்லீஸ்ட், இன்னொரு மந்திரி அன்பில் மகேஷ் ஆவது வேட்புமனு தாக்கலின் போது உடனிருப்பார் என்று துரைவைகோ எதிர்பார்த்தார். ஆனால், அவரும் எஸ்கேப் ஆகிவிட்டார். காரணம், தனது ஆதரவாளரான கே.என். சேகரனுக்கு திருச்சியில் சீட் கிடைக்காத டென்ஷனில் இருக்கிறாராம். ஜோதி மணியின் வேட்புமனு தாக்கலுக்கு கரூர் சென்ற அன்பில் மகேஷ் திட்டமிட்டுதான் திருச்சிக்கு வரவில்லை என்ற கடுப்பில் உள்ளராம் துரைவைகோ.

 

பிரசாரம் ஆரம்பிக்கும்போதே மதிமுகவுக்கு திமுக சீனியர்கள் போதிய ஒத்துழைப்பு தராததால் திருச்சி தொகுதியில் தனித்துவிடப்பட்டுள்ளதாக மதிமுகவினர் புலம்புகின்றனர்