ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு..!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின்வேலியால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமத்தில் உள்ள தனது விவசாய நிலத்தில் ராதாகிருஷ்ணன் என்ற விவசாயி அவரது மனைவி மகன் ஆகியோர் உயிரிழந்து கிடந்தனர்.
போலீசார் விசாரணையில் பக்கத்து நிலத்துக்காரர் மின்வேலி அமைத்ததும் அதனால் மூன்று பேரும் பலியானதும் தெரிய வந்தது. இந்த சம்பவத்தை மறைக்க முயன்ற அவரது மனைவி மற்றும் மகன் கைது செய்யப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





