--- --:--:-- --

சென்னையில் ஏற்பட்ட புயல்.. நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோ..!

6

சென்னையில் மழை நீர் தேங்கியிருக்கும் நிலையில் மக்களுக்கு தைரியம் கொடுக்கும் இடமாக மக்கள் பிரதிநிதிகள் களத்தில் இறங்கி செயல்பட வேண்டும் என நடிகர் விஷால் வலியுறுத்தியுள்ளார்.

 

அண்ணா நகரில் உள்ள தனது வீட்டில் தண்ணீர் தேங்கி நிலையில் வீடியோ வெளியிட்டுள்ள அவர் நடிகராக இல்லாமல் ஒரு வாக்காளராக இந்த கோரிக்கையை முன் வைப்பதாக தெரிவித்துள்ளார்.

 

மக்களுக்கு தைரியம் கொடுக்க எம்எல்ஏக்கள் மீட்புப் பணியில் ஈடுபட வேண்டும் எனவும் கூறியுள்ளார். மிகவும் மோசமான நிலையில் சென்னை மாநகரம் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடிகனாக இல்லாமல் ஒரு வாக்காளராக வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon