--- --:--:-- --

தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தி பெறப்பட்ட அரிய வகை விலங்குகள் பறிமுதல்..!

3

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்திவரப்பட்ட பாம்பு உள்ளிட்ட அரியவகை விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. தாய்லாந்து தலைநகர் பாங்கில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

 

தஞ்சாவூரை சேர்ந்த குருசாமி சுதாகர் என்பவர் நடத்தையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அதனை சோதனைக்கு உள்ளாக்கினர். அப்பொழுது அவரது உடைமைகளை மறைத்து வைத்துக்கொண்டு கொண்டுவரப்பட்ட மலைப்பாம்பு குட்டிகள் பார்மசின் வகை குரங்கு உள்ளிட்ட அரிய வகை விலங்குகள் இருப்பது கண்டறியப்பட்டது.

 

அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் குருசாமி சுதாகரை கைது செய்தனர். விசாரணைக்கு பின்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட வன விலங்குகள் அனைத்தும் மீண்டும் தாய்லாந்துருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

 

இதனிடையே வங்கதேச தலைநகர் டாங்காவிலிருந்து வந்த விமானத்தின் கழிவறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 94 லட்ச ரூபாய் மதிப்புள்ள முட்டை வடிவிலான 1,514 கிராம் கடத்தல் தங்கம் வைக்கப்பட்டன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon