காசாவில் பதற்றம்.. மருத்துவமனை மீது இஸ்ரேல் ராக்கெட் வீச்சு.. 500 பேர் பலி..!
காசாவில் காஜாவில் நேற்று இரவு நடைபெற்ற ராக்கெட் வீச்சில் மருத்துவமனை தவிர்க்கப்பட்டு சுமார் 500 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருக்கிறது.
நேற்று இரவு நடந்த ராக்கெட் குண்டு வீச்சில் காசா நகரின் முக்கிய மருத்துவமனையான அரபு மருத்துவமனை பற்றி எரிந்தது. இதில் ஏற்கனவே போரில் காயமடைந்தவர்கள் உள்நோயாளிகள் மட்டுமின்றி போருக்கு அஞ்சி மருத்துவமனைகளில் தஞ்சம் அடைந்தவர்கள் சேர்த்து 500 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
300க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உயிருக்கு போராடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை மீது குண்டு வீசியது போர் குற்றம் என்றும் இனப்படுகொலை என்றும் கூறியுள்ளார். இனியும் சர்வதேச நாடுகள் மற்றும் அரபு நாடுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதா என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளது.
உடனடியாக இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்த அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





