நடத்துனரை தகாத வார்த்தைகளால் திட்டிய குடிமகன்..!
திண்டுக்கல்லில் அரசு பேருந்தில் படியில் பயணம் செய்து வந்த மது பிரியரை இருக்கையில் அமரும்படி கூறிய நடத்துனரை தகாத வார்த்தைகளால் திட்டிய குடிமகனை பஸ்ஸிலிருந்து இறக்கி விட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு வழியாக திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பேருந்து திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே வந்தபோது இந்த பேருந்தில் ஏறிய குடிமகன் ஒருவர் பேருந்தின் படியில் நின்று பயணம் செய்து கொண்டுள்ளார்.
இதனால் பேருந்து நடத்துனரை குடிமகனை இருக்கையில் அமரும்படி கூறியதோடு கீழே விழுந்து அடிபட்டால் நாங்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடிமகன் நடத்துநரை தகாத வார்த்தைகளால் திட்டி கையை ஓங்கிக்கொண்டு அடிக்கவும் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் குடிமகனை சரமாரியாக தாக்கி பேருந்தை நிறுத்தி கீழே இறக்கி விட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





