திமுக எம்எல்ஏ நாசருக்கு அறுவை சிகிச்சை..!
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ நாசருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பித்தப்பையில் கல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிகிச்சை மூலம் பித்தப்பையில் இருந்த கல் அகற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே அவருக்கு குடல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாவதாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





