--- --:--:-- --

பணியின் போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர்..!

5

சென்னையில் பணியின் பொழுது மயங்கி விழுந்து காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்துள்ளார். விருகம்பாக்கத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

 

இவர் இரவு பணியில் ஈடுபட்ட பின்னர் காவல் நிலையத்தில் காலையில் நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்பொழுது திடீரென மயங்கி விழுந்தவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

அவருக்கு சிறுநீரகப் பிரச்சினையால் டயாலிசிஸ் செய்து வந்ததாகவும் இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon