--- --:--:-- --

ஜூலை 14ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம்..!

4

திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

 

இது பற்றிய அறிக்கையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

கட்சியின் தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் வரும் 14ஆம் தேதி காலை 10:30 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon