--- --:--:-- --

மீண்டும் கொரோனா பரவல் தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..!

1

சீனா மற்றும் ஹாங்காங்ல இருந்து தமிழகம் வருவோருக்கு விமான நிலையங்களை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 

தமிழகப் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் மத்திய சுகாதாரப்பணிகள் இயக்குநகரத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் கடந்த ஒரு வாரமாக சீனா மற்றும் ஹாங்காங்கில் கொரோனா பரவல் மிகவும் தீவிரமாக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

 

எனவே அதனை கருத்தில் கொண்டு தொற்று பரவல் அதிகம் உள்ள இரண்டு நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

 

அதன் மூலம் நோய் பரவல் தீவிரமடைவதை தடுக்க முடியும் என தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் தற்பொழுது தினசரி கொரோனா தொற்று 49ஆக உள்ளதாகவும் செல்வ விநாயகம் கூறியுள்ளார்

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon