ஜெய்ப்பூரில் காங்கிரஸ் தலைவர் மகள் கடத்தல்..!

ஜெய்ப்பூரில் காங்கிரஸ் தலைவரின் மகள் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெய்ப்பூர் காங்கிரஸ் தலைவரின் மகள் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை கடத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

 

இந்நிலையில் விமான நிலைய சாலையில் அவர் இருசக்கர வாகனம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.