--- --:--:-- --

உத்திரபிரதேசத்தில் முன்னாள் காதலியை 6 துண்டுகளாக வெட்டிய காதலன்..!

7

உத்தர பிரதேச மாநிலத்தில் முன்னாள் காதலியை கொலை செய்து உடலை ஆறு துண்டுகளாக வெட்டி கிணற்றில் வீசியவர் துப்பாக்கியால் சுட்டு காவல்துறையினர் கைது செய்தனர். டெல்லியில் ஸ்ரத்தா என்ற இளம் பெண் கொலை செய்யப்பட்டு 35 துண்டுகளாக வெட்டி வீசப்பட்ட சம்பவத்தை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

அதே பாணியில் உத்திரபிரதேசத்தில் முன்னாள் காதலியை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து உடலை ஆறு துண்டுகளாக வெட்டி கிணற்றில் வீசியுள்ளார். அவரை பிடித்து கிணற்றிலிருந்து பெண்ணின் தலையை எடுக்க காவல்துறையினர் அவரை அழைத்து சென்றனர்.

 

அப்பொழுது அங்கு மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து பிரின்ஸ் யாதவ் சுடவே பதிலுக்கு போலீசார் சுட்டு அவனை மடக்கினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon