வெள்ளத்துடன் முதலையும் அடித்து வரப்பட்டதால் குடியிருப்புவாசிகள் அச்சம்..!
மத்திய பிரதேசத்தில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்துடன் முதலையும் அடித்து வரப்பட்டதால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆற்றில் இருந்து அடித்து வரப்பட்டது. எட்டடி நீளமுள்ள முதலை குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித்திரிந்தது. அதையடுத்து அங்கு சென்ற பூங்கா ஊழியர்கள் முதலையை பிடித்து வெளியே விட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





