திருப்பூரில் தாக்கி கொண்ட பள்ளி மாணவர்கள்..! பரபரப்பு..!
ஒரு இரண்டு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கத்தியை வீசி தாக்கிக் கொண்டதில் தடுக்க முயன்ற வரையும் தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளது. திருப்பூரில் உள்ள இரண்டு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இடையே கடந்த ஒரு வாரமாக வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதன் தொடர்ச்சியாக இரு பள்ளிகளின் மாணவர்களும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இதனை கண்ட ஒருவர் மாணவர்களை தடுக்க முயன்றுள்ளார். அவரது மாணவர்கள் துரத்திச் சென்று தாக்கினர்.
கட்டைகளாலும் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து மாணவர்களை பிடித்த காவல்துறையினர் அவர்களின் பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




