வரும் 15ஆம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும்..!
குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக விவாதிக்க வரும் 15ஆம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 17ம் தேதி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தலைவர் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளதால் திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




