ஒரு இரு சக்கர வாகனத்தில் 7 பேர் பயணிக்கும் வீடியோ வைரல்..!
போக்குவரத்து நெரிசல், போக்குவரத்துக்கு விபத்து போன்றவற்றை தவிர்ப்பதற்கு சாலை விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக விதிமீறல் காரணமாக சில நேரங்களில் விபத்துகள் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் மக்களின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் நோக்கில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே செல்ல வேண்டும். அதுபோல் இருவருமே தலைக்கவசத்தை அணிந்து இருக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் இங்குஒரு நபர் ஏழு பேரை வைத்து இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்கிறார். முதலில் அந்த ஆண் நபர் வாகனத்தில் உட்கார்ந்து கொள்கிறார்.
பின்பு இரண்டு குழந்தைகள் முன்பும் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் பின்புறத்தில் உட்கார்ந்து வருகிறார்கள். இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கு வேடிக்கையாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டும் அலட்சிய போக்கையே காட்டுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





