--- --:--:-- --

ஆபத்தான முறையில் பள்ளி கட்டடத்தை சுத்தம் செய்த மாணவர்கள்..!

5

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே தொடக்க பள்ளி மாணவர் ஆபத்தான முறையில் பள்ளி கட்டட மாடியில் சுத்தம் செய்வதை பெற்றோர் கண்டித்து வருகின்றனர். கோட்டையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி கோடை விடுமுறைக்கு பின் திறக்கப்பட்டால் சுத்தம் செய்யப்படாமல் இருந்துள்ளது.

 

அந்த பள்ளியின் மாடியில் இருக்கும் குப்பைகளை சுத்தம் செய்யச் சொல்லி பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை அறிவுறுத்தியுள்ளனர். அதில் சில மாணவர்கள் ஆபத்தான முறையில் கட்டடத்தில் அங்கும் இங்கும் தாவி விளையாடினர். இதனால் பெற்றோர்கள் ஆசிரியர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon